வறட்சியால் விவசாயம் பாதிப்பு

சங்கராபுரம், ஜூலை 23:

கள்ளக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த 3 ஆண்டு

களாக மழை குறைவாக பெய்வதால், வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் மாற்று வருவாய்க்காக செம்மறி ஆடுகள்  வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து ஆடு வளர்க்கும்  விவசாயி ராமசாமி கூறுகையில், மழை இல்லாத காரணத்தால் மாற்று தொழில் மூலம் வருவாயை பெருக்க செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறோம். ஒரு  ஆட்டுக்குட்டி விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி, அவை குட்டி போடும் வரை மிகவும் கண்ணும் கருத்துமாக  பார்த்து வளர்ப்போம். ஒரு ஆடு வருடத்திற்கு 2 ஆட்டுக்குட்டிகள்  போடும். அதனை நாங்கள் உடனே ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்து விடுவோம். ஆடுகளுக்கென தனி தீவனம் கிடையாது. வயல்வெளியில்  உள்ள புற்களை  தீவனமாக பயன்படுத்துகிறோம் என்றார்.

Related Stories: