×

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியரிடம் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூலை 23: இந்து  மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ஆசைத்தம்பி, ஒன்றிய அமைப்பாளர்  பாலமுருகன் மற்றும் பாஜக கோலியனூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முருகையன்  உள்ளிட்டோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனிடம் மனு கொடுத்தனர். அந்த  மனுவில், விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் 2 ஆயிரம் குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்திற்குட்பட்ட முன்னோர்களால் தானமாக  வழங்கப்பட்ட மயானம் சில சமூகவிரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டும் இதுவரை ஆக்கிரமிப்பு  அகற்றப்படவில்லை. இதனால் 7 ஏக்கர் அளவிலான சுடுகாடு பகுதி தற்போது 20  சென்ட் பகுதியாக சுருங்கி விட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை புதைப்பதில்  மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின்  உடலை புதைக்க செல்லும்போது ஆக்கிரமிப்புதாரர்களால் சட்டம் ஒழுங்கு  பிரச்னை ஏற்படுகிறது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி  சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை