கருவேலம்பாடி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்

சின்னசேலம், ஜூலை 23: கல்வராயன்மலையில்  வெள்ளிமலை குறுவட்டத்திற்கு உட்பட்ட கருவேலம்பாடி கிராமத்தில் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர்  காந்த் தலைமையில் வருகிற  25ம்தேதி காலை 10மணியளவில் மனுநீதி நாள் முகாம்   நடைபெற உள்ளது. சின்னசேலம் தாசில்தார் இந்திரா, கல்வராயன்மலை தாசில்தார்  பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கின்றனர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட  தாசில்தார் ராஜராஜன், சிவில் சப்ளை தாசில்தார் பாண்டியன், தேர்தல் பிரிவு  துணைவட்டாட்சியர் கமலக்கண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை, சுகாதாரத்துறை  அதிகாரிகள் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்ற  உள்ளனர். ஆகையால் கல்வராயன்மலையில் உள்ள மலைமக்கள் சாதிச்சான்று,  வீடு, நிலம் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முகாமின்போது பெற்றிடும்  வகையில் முன்கூட்டியே சின்னசேலம் தாசில்தார், வெள்ளிமலை வருவாய் ஆய்வாளர்,  கருவேலம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுத்து பயன்பெற  வேண்டும் என தாசில்தார் இந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: