வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் பேரணி

உளுந்தூர்பேட்டை,  ஜூலை 23: உளுந்தூர்பேட்டையில் அகில பாரத படிப்பில் பின்தங்கிய மக்கள்  முன்னேற்ற கழகத்தின் சார்பில் உழவர் தின பேரணி நடைபெற்றது. நிறுவன தலைவர் ராஜமாணிக்கம் தலைமை  தாங்கினார். பாண்டூர் ராமகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார்.  அரங்கசெல்லமுத்து, அமிர்தலிங்கம், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த பேரணியில் கங்கை கோதாவரி நதிநீரை இணைக்க வேண்டும். விழுப்புரம்  மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக  இடுபொருட்கள் வழங்க வேண்டும். ஏரிக்கு வரும் நீர்நிலை வழிகளை சீரமைக்க  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. பேரணி முடிவில் மணிக்கூண்டு திடலில் கோரிக்கையினை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள  கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: