வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த நகராட்சி ஆணையர் ஆய்வு

புதுச்சேரி, ஜூலை 23:   புதுவை சட்டசபையை ஒட்டி அரசு பொது மருத்துவமனை உள்ளது. இதை ஒட்டியுள்ள செஞ்சி சாலை, விக்டர் சிமோனல் வீதி, செயின்ட் அந்துவான் வீதி உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் இருசக்க ர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது. தினமும் 250க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்களின் வாகனங்கள் மட்டுமின்றி நோயாளிகளின் வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் இப்பகுதியில் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. அப்பகுதிகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கி தவிக்கிறது. இதையடுத்து அங்கு வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வாசுதேவன், உள்ளிருப்பு அதிகாரி ரவி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் முருகையன் ஆகியோர் அப்பகுதிகளை நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.இதில் அரசு பொது மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்தத்தை முறைப்படுத்தவும், அங்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வாகனங்களை மாற்றுப் பகுதியில் நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

Related Stories: