வாணிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுச்சேரி,  ஜூலை 23:  கவிஞர் வாணிதாசன் 104வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி புதுவை பாரதி பூங்கா அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு  சார்பில் முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதில் அமைச்சர் கந்தசாமி, திமுக எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோர்  கலந்து கொண்டு மரியாதை செய்தனர். இதேபோல் வாணிதாசன் குடும்பத்தினரும்,  கவிஞர்கள், அறிஞர்கள் பலரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.எஸ்சி, எஸ்டி மக்களுக்கு காங்கிரஸ்  எப்போதும் உறுதுணையாக இருக்கும்புதுச்சேரி, ஜூலை 23:     உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் இடம் தொடர்பான பிரச்னையில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்தது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் மற்றும் மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியின மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களின் வீடு, விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மூலிகை, மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது. பாஜக ஆட்சி வந்தவுடன் பழங்குடியின மக்களின் இடங்கள் தனியார் தொழிற்சாலைகளுக்கு தாரைவார்க்கப்பட்டது. அந்த மக்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைதான் தற்போது உபியில் நடந்தது. இதை தட்டிக்கேட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கப்போன பிரியங்கா காந்தியை கைது செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஒரு சாமியார். அவருக்கு நிர்வாகம் தெரியாது.

 இதனால் அங்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. இதேபோல பல வடமாநிலங்களில் இது தொடர்கிறது. இதுபோல பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் உறுதுணையாக இருக்கும். காங்கிரஸ் இல்லையென்றால் அவர்கள் மீது மேலும் பல வன்முறைகள் பிரயோகிக்கப்படும். இவ்வாறு பேசினார்.

Related Stories: