2 அல்லது 3 வாரத்திலோ கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில், இந்த தீர்மானங்களை விவாதித்து பேசக்கூடிய நிலையில் அவசர, அவசரமாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நடத்த வேண்டிய தேவையில்லை என்றார்.

புதுச்சேரி, ஜூலை 23:     புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்களின் உரிமையை ஆளும் அரசு பறிப்பதாக கூறி, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலிருந்து என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அன்பழகன் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் இந்தாண்டுக்கான பட்ஜெட் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசு திடீரென்று சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி 4 தீர்மானங்களை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக எங்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூட  தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கேட்டபோது, உரிய பதில் வரவில்லை.  புதுச்சேரியில் இலவச அரிசி போடவில்லை, குப்பைக்கு வரி, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காதது போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது, அரசியல் உள்நோகத்துடன் இந்த சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து, என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால் கூறுகையில், சிறப்பு சட்டமன்றத்தில் நீர் மேலாண்மை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மும்மொழி கொள்கை, நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு விலக்கு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றவுள்ளதாக நேற்றிரவு எங்களிடம் அரசு தெரிவித்தது.   இதனை சிறப்பு சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்க முடியாது. மேலும், இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேச வாய்ப்பளிக்காமல் விமர்சிக்கும் வகையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் நடந்து கொண்டனர். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 2 அல்லது 3 வாரத்திலோ கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில், இந்த தீர்மானங்களை விவாதித்து பேசக்கூடிய நிலையில் அவசர, அவசரமாக

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நடத்த வேண்டிய தேவையில்லை என்றார்.

Related Stories: