×

குடும்ப தகராறில் முதியவர் பலி

பண்ருட்டி, ஜூலை 23: பண்ருட்டி அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(50)  இவர் தனது மகன் புகழேந்தியிடம் அடிக்கடி தகராறு செய்துகொண்டு வீட்டை விட்டு  வெளியே செல்வது வழக்கம். சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு கடந்த சில  தினங்களுக்கு முன்பு வடலூர் சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த நிலையில்  திடீரென மின்விசிறியில் தூக்கில் தொங்கி இறந்தார்.  காடாம்புலியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக  பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அவரது மனைவி  சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து  வருகின்றனர்.பதிவு செய்யப்படாத உவர்நீர் இறால் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை
கடலூர், ஜூலை 23: பதிவு செய்யப்படாத உவர்நீர் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர்  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
 கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக உரிய பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005ன் படி உரிய பதிவு இன்றி எந்த ஒரு உவர்நீர் இறால் பண்ணைகளும் செயல்படக்கூடாது. இதனை மீறுவோர்களுக்கு  கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005ன் படி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் பண்ணைகளின் பதிவு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. இப்பதிவினை மீண்டும் புதுப்பிக்க மாவட்ட அளவிலான குழு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு விண்ணப்பிக்கப்பட  வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் உவர்நீர் இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெள்ளை இறால் வளர்ப்பு செய்யப்படுவதற்கும், நன்னீர் இறால் வளர்ப்பு மேற்கொள்வதற்கு உரிய அனுமதி பெறவேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் சுற்றுப்புற சூழலுக்கும் மற்றும் விவசாய விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பதிவு பெற்று செயல்படும் அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளின் உரிமையாளர்களும் தங்களது பெயர், நிறுவனத்தின் பெயர், பண்ணை அமைந்துள்ள தாலுகா, வருவாய் கிராமம், வருவாய் புலன்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய பதிவு எண், நாள், குளத்தின்  மொத்த விஸ்தீரணம்,  நீர் பிடிப்பு பரப்பு ஏக்டேரில், மொத்த குளங்களின் எண்ணிக்கை மற்றும் வளர்க்கப்படும் இறால் வகை இனங்கள் ஆகியவற்றை  உள்ளடக்கி அனைவரும் அறியும் வகையில் தங்களது பண்ணை வளாகத்தில் 4 அடி நீளம் 3 அடி அகலம் கொண்ட அளவில் பேனர் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது