×

குடியாத்தம் அருகே) விவசாய நிலத்தில் 2 யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் பீதி

குடியாத்தம், ஜூலை 23: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த 2 யானைகள், பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் கொட்டமிட்டா கிராமத்தில் புகுந்து, அங்குள்ள விவசாய நிலத்தில் இருந்த பயிர்களை ேசதப்படுத்தியது. யானைகள் பிளிறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் பீதியடைந்தனர்.அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடியாத்தம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது.இதனால் காடுகளில் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...