ஆத்தூரில் முப்பெரும் விழா

ஆறுமுகநேரி, ஜூலை 23:  ஆத்தூரில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

  ஆத்தூரில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா, மன்றத்தின் 15வது ஆண்டுவிழா, விளையாட்டுவிழா என முப்பெரும் விழா நடந்தது. மன்றத் தலைவர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் சுந்தரபாண்டியன், ஆழ்வார் முன்னிலை வகித்தனர்.  செயலாளர் தங்கத்துரை வரவேற்றார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 விழாவில் வாகைகுளம் ராஜலெட்சுமி ஆர்ட்ஸ் காலேஜ் முதல்வர் நாஞ்சில் ராஜதுரை, நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அற்புதராஜ், ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் தாமோதரன், ஆத்தூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிழரசன், பழைய காயல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயசங்கர், திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத் தலைவர் உமரிகாமராராசு, ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் சங்கச் செயலாளர் சுரேஷ், ஆத்தூர் பஞ். முன்னாள் தலைவர் முருகானந்தம், வைகுண்டம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மூக்கன்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆத்தூர் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்திருந்தனர்.

Related Stories: