குரும்பூர், அம்மன்புரம், ஆறுமுகநேரியில் பாசன குளங்கள் தூர்வாரும் பணி

திருச்செந்தூர், ஜூலை 23: குரும்பூர், அம்மன்புரம், ஆறுமுகநேரி பகுதியில் பாசன குளங்களை தூர்வாரும் பணிகளை கலெக்டர் சந்தீப்நந்தூரி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தூர்ந்த நிலையில் உள்ள குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரி சீரமைக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார். இதையடுத்து திருச்செந்தூர் பகுதியில் உள்ள குளங்களில் மேற்கொள்ளவேண்டிய மராமத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் ஆர்டிஓ தனப்ரியா தலைமையில் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பாசன குளங்களை தூர்வார வலியுறுத்தினர். இதே போல் அம்மன்புரத்தில் நடந்த கிராமசபை சிறப்பு கூட்டங்களில் சீனிமாவடி குளத்தை தூர்வார வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அம்மன்புரம் சீனிமாவடி குளத்தில் ரூ.29 லட்சம், நல்லூர் கீழக்குளத்தில் ்ரூ29.50 லட்சம், ஆறுமுகநேரி குளத்தில் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று துவக்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் ஆர்டிஓ தனப்ரியா, தாசில்தார் தில்லைபாண்டி, வைகுண்டம் தாமிரபரணி ஆறு வடிநில கோட்ட உதவிப் பொறியாளர் ரகுநாதன், மண்டல துணை தாசில்தார் கோபால், விஏஓக்கள் அமுதா, சுஜாதா, பஞ்சாயத்து செயலாளர் ஜெயம், விவசாய சங்கத் தலைவர் துரைபாண்டி, அம்மன்புரம் பெரியகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க முன்னாள் தலைவர் கருத்தப்பாண்டி, திமுக ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ், ஊராட்சி செயலாளர் ஆத்திராஜன், அமமுக ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், விவசாயி கண்ணன், தூத்துக்குடி மாவட்ட திமுக பிரதிநிதி ஜெபராஜ், வீரமாணிக்கம் முன்னாள் பஞ்., தலைவர் நந்தகோபால், சுந்தர், சுடலைமுத்து மற்றும் பாசன விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: