×

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்

திருவாரூர், ஜூலை 23: திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சோமசுந்தரம் தலைமையில் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில், அடுத்த மாதம் 7ம்தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு அமைதி பேரணியில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் கலந்து கொள்வது, இளைஞரணி செயலாளராக உதயநிதிஸ்டாலினை நியமித்துள்ள கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு அயராது பாடு படுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்