×

லாரி மீது லோடு வேன் மோதி கிளீனர் பலி டிரைவர் படுகாயம்

திருவையாறு, ஜூலை 23: திருவையாறு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது லோடுவேன் மோதிய விபத்தில் கிளீனர் பலியானார். டிரைவர் படுகாயமடைந்தார்.திருவையாறு அடுத்த கல்யாணபுரம் முகமதுபந்தர் ஹத்திஜா நகரை சேர்ந்த முகமது அலி மகன் ஹசேன் (22). மினி லோடுவேன் டிரைவர். அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் முருகேசன் (18). இவர் மினிலோடு வேனில் கிளீனராக வேலை பார்க்கிறார். நேற்று இருவரும் மினிலோடு வேனில் கும்பகோணம் சென்று விட்டு திருவையாறு நோக்கி வந்தனர்.திருவையாறு அருகே வைரவன்கோவில் அருகே வரும்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மினிலோடு வேன் மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன், ஹசேன் ஆகியோர் படுகாயமடைந்தனர். சிறிது நேரத்தில் முருகேசன் பலியானார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹசேன் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவையாறு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்