ஆதனூரில் விவசாயிகள் கடன் அட்டை பெறும் விழிப்புணர்வு முகாம்

பேராவூரணி, ஜூலை 23: பேராவூரணி பேரூராட்சி ஆதனூரில் விவசாயிகள் கடன் அட்டை பெறும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண்மை அலுவலர் ராணி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கோகிலா, தீபா முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் விவசாயம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1.60 லட்சம் வரை பிணையம் இல்லாமல் 4 சதவீத வட்டியில் கடன் பெற்று குறிப்பிடப்பட்ட தேதிக்குள் கடன் தொகையை செலுத்தி பயனடையலாம் என்றார்.கிராம நிர்வாக அதிகாரி அன்பரசி பேசும்போது, மத்திய அரசின் கிசான் திட்டம் மூலம் ரூ.6,000 பெறாதவர்களுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் கொடுக்காதவர்களும், தள்ளுபடி செய்யப்பட்ட மனுதாரர்களும் தகுந்த ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.முகாமில் ஆதனூர் கிராம பிரமுகர்கள் மான்சிங், சக்கரியாஸ், பிரட்ரிக், இருதயராஜ், பிரான்சிஸ் கண்டாக்,கோஸ்துரை, பவுன்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: