அரசு பெண்கள் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கில மொழி கற்பித்தல் என்கிற தலைப்பில் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை கல்லூரி முதல்வர் சிந்தியாசெல்வி துவக்கி வைத்தார். ஆங்கிலத்துறை தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேங்கடலெட்சுமி வாழ்த்தி பேசினார். தொடக்க விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அக்கேடமிக் ஸ்டாப் காலேஜ் இயக்குனர் செந்தில்நாதன் பேசினார்.சென்னை விஐடி பல்கலைக்கழக ஆங்கில இணை பேராசிரியர் விஜயலட்சுமி, சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் மதி வேங்கடலட்சுமி, சவுதி அரேபியா ஜான்சன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் மரியமெர்சி அமுதா அமல்ராஜ், சவுதி அரேபியா இமான் அப்துல் ரஹ்மான் பின் பிசால் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் அரூரி ஆகியோர் பேசினர். இதில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.கருத்தரங்கு நிறைவு விழாவுக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேங்கடலட்சுமி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ஜெயசீலி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மன்னர் அரசு கலைக்கல்லூரி ஆங்கில இணை பேராசிரியர் பேசினார். இதி்ல் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: