பண்டாரவாடையில் திருட்டு, குற்றம் தடுக்கும் ஆலோசனை கூட்டம்

பாபநாசம், ஜூலை 23: பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் திருட்டு குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். புதியவர்கள் ஊருக்குள் வந்தால் விசாரிக்க வேண்டும். வீடுகளில் கொல்லைப்புற கதவுகளை எளிதில் திறக்கும் வகையில் அமைக்கக்கூடாது. வெளியூர் செல்லும்போது காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பாபநாசம் டிஎஸ்பி நந்தகோபால், பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், ராஜகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவூது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகமது காசிம், தம்பி முகமது இப்ராகிம், ஹாஜா ஷெரீப், காசிமியா ஜமாலியா முபாரக், சிக்கந்தர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: