×

அரிமளம் அருகே உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பெருவிழா

திருமயம், ஜூலை 23: அரிமளம் அருகே உலக நன்மை வேண்டி நடைபெற்ற ருத்ர ஹோம பெருவிழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள அறநிலைய துறைக்கு சொந்தமான நெடுங்குடி பிரசன்ன நயாகி, கைலாசநாதர் கோயிலில் 6ம் ஆண்டு ருத்ர ஹோம விழா நேற்று நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் மிக பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் கால பூஜையின் போது தீபாராதனை, ஆன்மீக நகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை 2ம் கால பூஜைகள் தொடங்கிய நிலையில் தொடர்ந்து ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம், கோ, அஸ்வ, கஜ பூசைகள் நடைபெற்றது.இந்நிலையில் பக்தர்கள் வரிசையாக வந்து யாக சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் பூஜை பொருட்களாகிய பழங்கள், தேங்காய், தானியங்கள், திரவிய பொடிகள் உள்ளிட்ட பொருட்களை தீயிலிட்டு வழிபட்டனர். உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஹோம நிகழ்ச்சியை கான சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...