×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை, ஜூலை 23: தமிழகத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் நீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன் பத்தை ஊராட்சியில் ஜால்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி புதுப்பட்டி சாலை வழியாக கடைவீதிகள் வழியாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை அடைந்தது. இந்த பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பல்லவராயன்பத்தை ஊராட்சி மன்ற செயலாளர் செல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா