×

பைக் திருடன் கைது

காரைக்கால், ஜூலை 23: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் போலீசார் காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி, வாகன ஆவணங்கள் கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். தொடர் விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஹசன் சாகுல்ஹமீது (36) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு பைக் என தெரியவந்தது. தொடர்ந்து, காரைக்காலில் வேறு எங்கெல்லாம் பைக்கை திருடினாய் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...