×

தனியார் பார்சல் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் புக்கிங் செய்யப்படுகிறதா? உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

நாகை, ஜூலை 23: நாகையில் பார்சல் புக்கிங் நடைபெறும் தனியார் நிறுவனத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பார்சல் புக்கிங் செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.நாகையில் பார்சல் புக்கிங் செய்யும் இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் புக்கிங் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏதும் பார்சல் செய்யப்பட்ட நிலையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்தின் மேலாளரிடம் விசாரித்தபோது எந்தவித தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏதும் புக்கிங் செய்வதில்லை, டெலிவரி செய்வதில்லை என்று தெரிவித்தார்.எனினும் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் புக்கிங் மற்றும் டெலிவரி செய்யப்பட மாட்டாது என வருபவர்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...