×

வேதாரண்யம் தாலுகா காவல் நிலையங்களில் மத்திய அதிவிரைவு படை குழு ஆய்வு

வேதாரண்யம், ஜூலை 23:
வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 5 காவல் நிலையங்களில் மத்திய அதிவிரை படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு, வேட்டைக்கானிருப்பு, தலைஞாயிறு ஆகிய காவல் நிலையங்களில் மத்திய அதிவிரைவு படை குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கோயமுத்தூரில் 105வது பட்டாலியன் விரைவு அதிரடிப்படை கமாண்டன்ட் சிங்காரவேலு தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது போலீஸ்சாரிடம் பழைய குற்றவழக்குகள் தொடர்பான ஆவணங்களை அதிவிரைவு படையினர் பார்வையிட்டு அதில் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தனர்.பின்பு அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்திடவும் தகராறு செய்பவர்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்யவும் அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தினர்.பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து, காவல்நிலைய அதிகாரிகளோடு விவாதித்தார். ஆய்வின்போது வேதாரண்யம் டிஎஸ்பி காந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபேஸ், சுகுணா, கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்