×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர், ஜூலை 23: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலை வாய்ப்பு, புதிய குடும்ப அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக பொதுமக்கள் வழங்கிய 321 மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கண் பார்வை குறைபாடு உள்ள 7 நபர்களுக்கு பிரெய்லி கடிகாரம் மற்றும் நவீன மடக்கு குச்சியையும், ஒரு மாணவிக்கு தாங்கு கட்டைகளையும் கலெக்டர் வழங்கினார். மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் ஒருவருக்கு அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.4.84 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.முன்னதாக குறைதீர் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என சித்த மருத்துவ பிரிவுக்கு உத்தரவிட்டதன்பேரில், முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், நேர்முக உதவியாளர் செல்வசுரபி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் லீலாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்