×

கரூர் நகராட்சி பகுதியில் காலாவதியான உணவுப்பொருள் விற்பனையா? அதிகாரிகள் சோதனை நடத்த எதிர்பார்ப்பு

கரூர், ஜூலை 23: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான வர்த்தக நிறுவனங்களும், சிறு கடைகளும் அதிகளவு உள்ளன. இதில் சில கடைகளில் விற்பனை நிர்ணய காலக் கெடுவை தாண்டியும் சில பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.இதுபோன்ற பொருட்களின் விற்பனை காரணமாக வாங்கி பயன்படுத்துவர்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி, கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது