×

புத்தக திருவிழா வாசிக்கும் பழக்கம் ஊக்குவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

கரூர், ஜூலை 23: புத்தக திருவிழாவையொட்டி வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல்இயக்கம், பாரதி புத்தகாலயம் நடத்தும் 3வது புத்தகத்திருவிழா கரூர் கொங்குமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் இருந்து துவங்கியது. கோவை சாலையில் புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கில் நிறைவுபெற்றது. புத்தக திருவிழா தலைவர் தங்கராசு, செயலாளர் ஜான்பாட்சா, சுப்பிரமணியன், காமராஜ், பாஸ்கரன், பெரியதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாலையில் நடைபெற்ற கருத்தரங்கில், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், உமர்பாரூக் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். பள்ளி மாணவ மாணவியரின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.3வது ஸ்டாலில் சூரியன் பதிப்பகம்:
புத்தகத் திருவிழாவில் 3வது ஸ்டாலில் சூரியன் பதிப்பகத்தின் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ் இலக்கியம், ஆன்மீகம், கோயில்கள், வேலைவாய்ப்பு, தொழில்கள், சட்டம், மருத்துவம், சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா