×

கடுமையாக உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் கரூர் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

கரூர், ஜூலை 23: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு கரூர் அரசு ஊழியர் சங்க கூட்டஅரங்கில்நடைபெற்றது. நாராயணன், நாகராஜ் தலைமை வகித்தனர். டேவிட்எபினேசர், பாலகுமரன், ராஜேந்திரன், தனபாக்கியம், மகாவிஷ்ணன், மோகன்குமார், சாமுவேல் சுந்தரபாண்டியன், ஆகியோர் பேசினர்.கூட்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர் அனைவருக்கும் காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது,. அனைத்து மருத்துவமனைகளிலும் எல்லா வியாதிகளுக்கும் காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.ஓய்வூதியர் அனைவருக்கும் நிபந்தனையின்றி இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். கரூர் நகராட்சி நிர்வாகத்தினால் கடுமையாக உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் கட்டுப்படியான சொத்து வரியை விதித்திட வேண்டும். கரூர் மாவட்டம், கரூர் நகராட்சியில் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். ஓய்வூதியர்கள்அனைவருக்கும் வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...