திமுக உறுப்பினருக்கு சைக்கிள் வழங்கல்

பாவூர்சத்திரம், ஜூலை 23:  கீழப்பாவூர் சிவகாமிபுரத்தில், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக உறுப்பினர் ராமருக்கு லோடு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் தலைமை வகித்து லோடு  சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் துணை தலைவர்  தங்கச்சாமி, வார்டு செயலாளர் ராஜதுரை, இசக்கி, நகர பொருளாளர் பொன்செல்வன்,  செல்வன், சமுத்திரப்பாண்டி, முப்புடாதிமுத்து, சுப்பிரமணியன், முருகன்,  சுப்பிரமணியன், வீராசாமி, முத்து, பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: