×

ஏர்வாடியில் முப்பெரும் விழா

ஏர்வாடி, ஜூலை 23:  ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 9வது தெரு அர்ஹூதா பள்ளியில் அஸ்மா பெண்கள் அரபிக்கல்லூரியின் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா, குழந்தைகளின் சமூக சீர்திருத்த பிரசாரங்கள், பைத்துல்மாலின் கடந்த 15 ஆண்டு பணிகள் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.  அலிமாலிக் அபுபக்கர் தலைமை வகித்தார். முகம்மது அலி முன்னிலை வகித்தார். அப்பாஸ் அலி, கல்வியின் அவசியம் குறித்து பேசினார். மூத்த ஆசிரியர் இமாம் ரஹ்மத்துல்லா பட்டமளித்து பேசினார். ஜமாஅத்தின் செயல்பாடுகளை பொருளாளர் ஷாபி விளக்கினார். தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீத் நன்றி கூறினார்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா