×

ஆளில்லாத ரயில்வே கேட்டுக்கு ஊழியர் நியமிக்க வேண்டும்

நெல்லை, ஜூலை 23: ஆளில்லாத ரயில்வே கேட்டில் ஆள் நியமிக்க கோரி காருக்குறிச்சி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அம்மனு விபரம்: காருக்குறிச்சி அருகே மேலபுதுக்குடியில் சுமார் 300 வீடுகள் உள்ளன. எங்கள் ஊருக்கு அருகாமையில் புதூர் கிராமத்தில் 500 வீடுகள் உள்ளன. அங்கு செல்லும் வழியில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் உள்ளது. அதன் அருகே விவசாய பணிகளுக்கான கன்னடியன் கால்வாய் உள்ளது. நாங்கள் விவசாய பணிகளுக்கும், பள்ளி குழந்தைகள் பள்ளிக்கும் செல்லவும் ரயில்வே கேட்டை கடந்தே செல்ல வேண்டும்.இந்நிலையில் ரயில்வே கேட் பாதையை அடைத்துவிட்டு, தண்டவாளத்திற்கு அருகே புதிய தார் சாலை அமைத்துள்ளனர். அப்பாதை பாதுகாப்பற்ற முறையில் இருப்பதோடு, வெகு தூரம் சுற்றியும் செல்ல வேண்டியதுள்ளது. இரவு நேரங்களில் அப்பாதை வழியாக வரும் மாணவ, மாணவிகள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் ஆட்களை நியமித்து ரயில்வே கேட்டை திறந்துவிட கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்புலிகள் கொள்கை பரப்பு செயலாளர் தென்காசி தமிழ்குமரன் அளித்த மனுவில், ‘‘நெல்லை கோர்ட் எதிரேயுள்ள ஓண்டிவீரன் மணிமண்டபத்தில் முட்புதர்களை அகற்றி தரவேண்டும். அங்கு ரூ.82 லட்சத்தில் பூங்கா, நூலகம் அமைத்திட கலெக்டர் ஏற்கனவே தயாரித்த மதிப்பீடு திட்டத்தையும் நிறைவேற்றி தர வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்