ம்பரம் 18, 22, 23வது வார்டுகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

தாதாம்பரம்: கிழக்கு தாம்பரம், ஐஏஏப் சாலையில் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 18, 22, 23 ஆகிய வார்டுகள் உள்ளன. இதில் 7,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலமுறை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக தினந்தோறும் சுமார் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் எப்போது? எந்த நேரம்? என சொல்ல முடியாத அளவிற்கு மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு, வேலைக்கு செல்வோர், உரிய நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்ல முடியவில்லை. மதியம் நேரத்தில் வீட்டில் குடிநீர் மோட்டார் போட முடியாமலும், இரவு நேரத்தில் தூங்க முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அடிக்கடி மின்தடை ஏற்பட என்ன காரணம்? என ஆய்வு செய்து சீரான முறையில் மின் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை தினந்தோறும் மின்தடை ஏற்படுகிறது.  பின்னர் மின்சாரம் வந்தாலும், அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் மின்தடை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மின்வாரிய அதிகாரி ஒப்புதல்

சிட்லப்பாக்கம் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கிழக்கு தாம்பரம் ஐஏஏப் சாலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது உண்மைதான். எங்களுக்கு தினமும் புகார் வந்தபடி தான் உள்ளது. நாங்களும் எதனால் இதுபோன்று நடைபெறுகிறது? எந்த இடத்தில் பழுது ஏற்படுகிறது? என தேடி தேடி பழுதை சரி செய்கிறோம். அப்படி சரி செய்த சில மணி நேரங்களில் மீண்டும் மற்றொரு இடத்தில் பழுது ஏற்பட்டு மீண்டும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் தினமும் நாங்கள் பழுது எங்கு இருக்கிறது? என தெரியாமல் பழுதை தேடி தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறோம்’’ என்று புலம்பினார்.

Related Stories: