பைக் விபத்தில் பலியான மேஸ்திரி குடும்பத்துக்கு 16 லட்சம் இழப்பீடு செ

ன்னை: சென்னையை சேர்ந்தவர் கண்ணபிரான். கட்டிட மேஸ்திரி. கடந்த 26.7.2017 அன்று கிண்டி பகுதியில் கண்ணபிரான் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் கண்ணபிரானின் மனைவி செல்வி, மகள்கள் சங்கீதா, பொன்னம்மாள், பிரியா, மகன் கார்த்திகேயேன் ஆகியோர் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவில் கண்ணபிரானின் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கியது. தற்போது படிப்பு, குடும்ப செலவுக்கு கடினமாக உள்ளது. எனவே 33 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வாங்கி தர  வேண்டும் என கூறியிருந்தனர்.  இந்த மனு நீதிபதி உமா மகேஷ்வரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ‘கண்ணபிரான் மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். ஒருநாள் 750 வருமானம் பெற்றுள்ளார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. எனவே கண்ணபிரானின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 16 லட்சத்து 16 ஆயிரத்து 500 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Tags :
× RELATED ‘காபி வித் கமிஷனர்’ திட்டத்தில்...