×

குமரி முழுவதும் சாரல் மழை

நாகர்கோவில், ஜூலை 19: குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.  தென் மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தில் வலுப்பெறவில்லை. அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவு இல்லாத நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. களியலில் 6.4, குழித்துறை 4.6, பேச்சிப்பாறை 5.4, குளச்சல் 3.6, அடையாமடை 4, முள்ளங்கினாவிளை 8 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.80 அடியாக சரிந்திருந்தது. அணைக்கு 350 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 466 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 39.45 அடியாக இருந்தது. அணைக்கு 217 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 320 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 7.71 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 7.80 அடியும், பொய்கையில் 7.40 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையில் 45.36 அடி நீர்மட்டம் உள்ளது. இங்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.இந்த நிலையில் நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் சாரல் மழை பொழிவதுமாக இருந்தது.


Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...