×

பணிக்கேற்ற ஊதியம் கேட்டு வெளி நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம்

நாகர்கோவில், ஜூலை 19:  தகுதிக்கேற்ற பதவிஉயர்வு, பணிக்கேற்ற சம்பள உயர்வு வழங்கவேண்டும். பணிக்கு சேர்ந்து 13 ஆண்டில் கிடக்கவேண்டிய பணப்பலன்கள், 20 ஆண்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணப்பலன்களை 13 ஆண்டுகளில் வழங்கவேண்டும். புதிய அரசாணைபடி மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் டாக்டர்கள் பணி இடத்தை குறைக்கும் விதத்தில் இடமாறுதல் செய்வதை தடுக்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பு படிக்க 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். பட்டமேற்படிப்பு முடிந்த டாக்டர்களுக்கு கலந்தாய்வு முறைப்படி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவமனை சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்களில் 2 மணி நேரம் வெளி நோயாளிகள்(ஓபி) சிகிச்சையை புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணிவரை ஓபி புறக்கணிப்பு போராட்டத்தில் சில டாக்டர்கள் ஈடுபட்டனர். ஆனால் வழக்கம்போல் ஓபி பணிகள் நடந்தது என மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வழக்கத்தை விட குறைந்த அளவே நோயாளிகள் வந்திருந்தனர். இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஓபி புறக்கணிப்பில் டாக்டர்கள் ஈடுபட்டனர். 

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி