மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

திருவையாறு, ஜூலை 19: திருவையாறு அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தஞ்சை அடுத்த திருச்சோற்றுத்துறையை சேர்ந்தவர் விஸ்வநாதன் (39). இவர் திருச்சோற்றுத்துறை குடமுருட்டி ஆற்றில் மாட்டு வண்டியில் மணலை ஏற்றி கொண்டு வந்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தார். அப்போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் வழக்குப்பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.

Tags :
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்