முதல்வருக்கு மனு மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டதால் தகராறு

கும்பகோணம், ஜூலை 19: கும்பகோணம் கர்ணகொல்லை அக்ரஹார தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன்கள் சுரேஷ் (51) மற்றும் ஆனந்த் (45). ஆட்டோர் டிரைவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷின் மகள்களை அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன்கள் கணேஷ் (25) மற்றும் ராஜா (22) மற்றும் மணி மகன்கள் விக்னேஷ் (27) மற்றும் விக்ரம் (22) ஆகிய நான்கு பேரும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து 4 பேரிடம் சுரேஷ் கேட்டார். இதுகுறிதது தகவலறிந்து சுரேஷின் தம்பி ஆனந்த் வந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதைதொடர்ந்து இருதரப்பினரும் உருட்டுகட்டை மற்றும் கத்தியால் குத்தி தாக்கி கொண்டனர். இதில் ஆனந்த் மற்றும் கணேசுக்கு கத்தி குத்து விழுந்தது. இதுதொடர்பாக இருதரப்பினரும் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சுரேஷ், விக்னேஷ், விக்ரம், ராஜாவை கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: