பாதாள சாக்கடை அடைப்பால் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம்

கும்பகோணம், ஜூலை 19: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் கழிவுநீர் ழிந்தோடுகிறது.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்குவீதியில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், உணவு விடுதிகள் மற்றும் கோயில்கள் உள்ளன. இந்த சாலை வழியாக பள்ளிகள், பெண்கள், கல்லூரி, தபால் நிலையம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவைக்கு செல்வர்.
Advertising
Advertising

இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து கடந்த சில நாட்களாக அதிகாலைமுதல் திடீரென அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. ஆனால் இதை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் தினம்தோறும் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கழிவுநீரை மிதித்தவாறு பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி வணிகர்கள் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை பணிகளை சரிவர பணிகள் செய்வதில்லை. அதனால் தான் எங்கோ அடைப்பு ஏற்பட்டதற்கு இங்குள்ள மேன்ஹோலில் கழிவுநீர் வெளியில் வருகிறது. எனவே கும்பகோணம் நகராட்சி நிரிவாகம் உடனடியாக நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: