பள்ளி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணம், ஜூலை 19: கும்பகோணம் வட்டார பொது சுகாதாரத்துறை, தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்டம், கல்வித்துறை சார்பில் சுவாமிமலை சுவாமிநாதா நடுநிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுவாமிமலை சுகாதார ஆய்வாளா் சவுந்தர்ராஜன் வரவேற்றார். தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்ட அலுவலர் டாக்டர் அஜித் பிரபுகுமார் தலைமை வகித்து பேசுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்ட பூச்சியியல் வல்லுனர் இளங்கோவன் பேசுகையில், கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்றார்.பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளா் சங்கரன், ஒரு வைரஸ் அரக்கன் போன்று வேடமணிந்து மாணவர்களிடம் என் நண்பனாகிய ஏடிஸ் கொசுவை காணவில்லை, ஏடிஸ் கொசு நல்ல நீரில் மட்டுமே உற்பத்தியாகிறது. மாணவர்களாகிய நீங்கள் தேவையற்ற பொருட்களை அளிப்பதன் மூலமாகவும், அகற்றுவதன் மூலமாகவும், வீட்டில் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைப்பதன் மூலம் என் நண்பனை தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் முட்டையிட்டு வளராமல் தடுத்து விடுகிறீர்கள்.

Advertising
Advertising

எனவே என் நண்பனை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மாணவர்கள் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடியும், தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றியும் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வைத்திருப்பதன் மூலம் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பாதுகாக்க முடியும். அதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமலும் தடுக்க முடியும் என்றார். இதைதொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும் மாணவா–்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியும் நடத்தப்பட்டது. சுவாமிநாதா பள்ளி தலைமையாசிர்யா் கணேஷ் நன்றி கூறினார். முகாமில் சுகாதார ஆய்வாளா–்கள் வீரமணி, சிவகுமார், சாம்சன், கோமதி செய்திருந்தனர்.

Related Stories: