×

லாரி சிறைபிடிப்பு பேராவூரணி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு வீடு தேடி சென்று சத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

பேராவூரணி, ஜூலை 19: பேராவூரணி வட்டாரம் வலசக்காட்டில் கர்ப்பிணிகளுக்கு வீடு தேடி சென்று சத்துப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பேராவூரணி வட்டாரம் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுத்து ஆரோக்கியமான தாய், அதிக எடை உள்ள, அறிவு வளர்ச்சி நிறைந்த குழந்தை பிறப்புக்காக நன்கொடையாளர்கள் மூலம் பசும்பால், நாட்டு வெல்லம், முட்டை மற்றும் காய்கறி வீடு தேடி சென்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட தென்னை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க பொருளாளர் செல்வம்,6 ஏழை கர்ப்பிணிகளை தத்து எடுத்து அவர்களுக்கு சத்துப்பொருள்களை வழங்கினார். கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலம் வரை இந்த திட்ட பொருட்கள் கிராம சுகாதார செவிலியர் மூலம் வீடு தேடி சென்று வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணிகளின் எடை மற்றும் ஹீமோகுளோபின் அளவு கண்காணிக்கப்படுவதோடு தொடர்ந்து மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் அறிவானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, பகுதி சுகாதார செவிலியர் தேவி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...