பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதியில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தபால் அலுவலகம் அருகே வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் தாமரைச்செல்வம்(28). இவர் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக பொன்னமராவதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குபதிவு செய்து சிங்கம்புணரியை சார்ந்த தாமரைச்செல்வத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED விவசாயிகள் சங்கம் கோரிக்கை சர்வதேச தொண்டர்கள் தின விழா