பொன்னமராவதி அருகே காப்பீடு செய்ய மா சாகுபடி விவசாயிகளுக்கு அழைப்பு

பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள மா மரம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யது கொள்ள அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குனர் கூறினார். பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சியில் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் மா பயிருக்கு பயிர் காப்பீட்டு திட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பொன்னமராவதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தீனவர்மன் தலைமை வகித்தார். தோட்டக்கலை அலுவலர் நிஜா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மணி, கார்த்திக், கன்னியா ஆகியோர் தோட்டக்கலைத் துறையின் திட்டங்களை விளக்கினர்.

மேலும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பது அதற்கு வேண்டிய ஆவணங்கள், நுண்ணீர் பாசனத்திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் விளக்கப்பட்டது. மேலும் அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் மா, பலா, வாழை,எலுமிச்சை மற்றும் காய்கறி பயிர்களுக்கு சொட்டு நீர் அமைத்து அரசு மானியம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியம் பெற்று பயனடைய கூறப்பட்டது.

ஆர்.பாலகுறிச்சி வருவாய் கிராமத்தில் மா மரத்திற்கு பயிர் காப்பீடு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மா பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.700 பிரிமியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய வங்கிகளில் பிரிமியத் தொகை செலுத்தி இயற்கை சீற்றம் மற்றும் வறட்சிகளால் ஏற்படும் சேதாரத்திற்கு உரிய நிவாரணம் பெறலாம் என தோட்டக்கலை அதிகாரிகள் மூலம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிராம உதவியாளர் அய்யப்பன், பணித்தள பொறுப்பாளர் முருகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த...