பொதுமக்கள் மகிழ்ச்சி அரசு பள்ளி கட்டிடத்தை திறக்க கோரி வெள்ளாளவிடுதியில் இன்று திட்டமிட்டபடி போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

கந்தர்வகோட்டை, ஜூலை 19: கந்தர்வகோட்டை தாலுகா வௌ்ளாளவிடுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கந்தர்வகோட்டை தாலுகா வௌ்ளாளவிடுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி இன்று (19ம்தேதி) அப்பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தாலுகா அலுவலகத்திலிருந்து போராட்டக்காரர்களை சமாதான பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைத்திருந்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் ஏற்கனவே சமாதான பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டபடி பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பேச்சுவார்த்தையை புறங்கணித்து யாரும் செல்லவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி சாலையில் அமர்ந்து படிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது 24ம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த மாதம் 1ம் தேதி பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்தால் உறுதிமொழி கொடுத்தன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.அறிவித்தப்படி பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (19ம்தேதி) சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் நேற்று தாலுகா அலுவலகத்தில் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை போராட்டக்காரர்கள் புறங்கணித்தர். இதனால் திட்டமிட்டப்படி இன்று சாலைமறியல் நடக்கும் என உறுதியாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED விவசாயிகள் சங்கம் கோரிக்கை சர்வதேச தொண்டர்கள் தின விழா