×

கட்டுமாவடி, மணமேல்குடியில் இரண்டு மணி நேரம் பலத்த மழை

மணமேல்குடி, ஜூலை 19: கட்டுமாவடி, மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பநிலை 95 டிகிரிக்கு மேல் அடித்து வருகிறது. இதனால் அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள்.

மேலும் பல பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டு, விவசாயிகளும் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி யிருக்கிறார்கள்.இந்நிலையில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் சுமார் இரண்டு மணி நேரம் வரை கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், மணமேல்குடி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று மாலை பெய்த கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் இரவு புதுக்கோட்டை பகுதியில் லேசான மழை பெய்தது. இதேபோல புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு