புதுக்கோட்டையில் பிரபல ரவுடிக்கு குண்டாஸ்

புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் பாஸ்கர். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வழிப்பறி வழக்கில் ரவுடி பாஸ்கரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடி பாஸ்கரை கைது செய்ய உத்தரவிடுமாறு, கலெக்டருக்கு எஸ்பி செல்வராஜ் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி பிரபல ரவுடி பாஸ்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாஸ்கரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.

Tags :
× RELATED விவசாயிகள் சங்கம் கோரிக்கை சர்வதேச தொண்டர்கள் தின விழா