108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டையில், அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வரும்போது வழியிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மகேஸ்வரியை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அழைப்பு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வியாழக்கிழமை மாலை வந்தது.ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது தொலைவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு வழக்கமான டாக்டர்களின் ஆலோசனை தொலைபேசி வழியே பெறப்பட்டு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. மாலை 6.05 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் குறித்த பயிற்சி