×

கொள்ளிடம் அடுத்த கொப்பியத்தில் சாலையோர மெகா பள்ளத்தால் தொடர் விபத்து

கொள்ளிடம், ஜூலை 19: கொள்ளிடம் அருகே கொப்பியம் கிராமத்தில் சாலையோரம் உள்ள உடைப்பை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் கொப்பியம் கிராமத்தில் சாலையோரம் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இந்த உடைப்பு கடந்த 2 மாதங்களாக உள்ளது. சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பள்ளி மாணவர்கள் அடிக்கடி இந்த பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குளாகின்றனர்.சைக்கிளில் செல்லும் மாணவர்கள் பலர் இந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் பிரகாசமாக இருப்பதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சாலையோர பள்ளத்தில் விழுந்து அடிபடுகின்றனர். அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்களும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே விபத்துக்கு காரணமாக நெடுஞ்சாலையின் ஓரம் கொப்பியம் கிராமத்தில் உள்ள உடைப்பை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...