×

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு 4 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு நிலம் எடுப்பு அதிகாரி அழைத்த பேச்சுவார்த்தை புறக்கணிப்பு

மயிலாடுதுறை, ஜூலை 19: கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிகாரியின் போக்கை கண்டித்து நில உடமைதாரர்கள் வெளிநடப்பு செய்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழிச்சாலை ஏற்படுத்த நிலம் கையகப்படுத்த முயற்சிக்கும் அதிகாரிகளின் முறையற்ற போக்கை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று கடலூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு அதிகாரி மங்களம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிகாரி பேசும்போது, நிலஎடுப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்தேன். மேலதிகாரிகளின் ஆலோசனையின்படிதான் அனைத்தும் நடந்தது, நிலத்திற்கான விலையை உயர்த்தி அளிக்க மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வையுங்கள், என்னால் இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.

அதற்கு நில உடைமைதாரர்கள் நீங்கள் நிலத்தின் விலையை சந்தை மதிப்பிற்குக்கீழ் 11 மடங்கு குறைவாக அளித்த முடிவிலிருந்து மாறப்போவதில்லை. ஆகவே நாங்கள் விலையைப் பற்றியே இங்கு பேச வரவில்லை. உங்களது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் நடக்கிறீர்கள். ஆனால் நாங்கள் எங்களது நிலத்தை 4 வழிச்சாலைக்கு வழங்க தயாராக இல்லை. ஆகவே நாங்கள் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம் என்று கூறிவிட்டு நில உடைமைதாரர்கள் அனைவரும் வெளியேறிவிட்டோம். மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர், நாங்கள் செல்லவில்லை என்றார்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்