×

விழிப்புணர்வு பேரணி பொய் வழக்கு பதிந்த பேரளம் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

நாகை, ஜூலை19: வக்கீல் மீது பொய் வழக்கு பதிவு செய்த பேரளம் போலீசாரை கண்டித்து நாகையில் வழக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.நாகையில் வக்கீல்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. இதில் நாகை வக்கீல்கள் சங்க தலைவர் நடேசஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தின் முடிவில் அவர் கூறியதாவது:திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த சிலர் மீது பேரளம் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அந்த வழக்கில் மணல் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்ததாக நாகை வழக்கீல் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் வழக்கீல் பாஸ்கரனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் பேரளம் போலீசாருக்கும் வக்கீல் பாஸ்கரனுக்கும் வழக்கு ஒன்றில் ஏற்கனவே உள்ள காழ்புணர்ச்சி காரணமாக வக்கீல் பாஸ்கரன் மீது பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே இதை நாகை வழக்கீல்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் பொய் வழக்கு பதிவு செய்த பேரளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை சரக டிஐஜி அலுவலகம், திருவாரூர் மற்றும் நாகை எஸ்பி அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளோம். இந்த வழக்கில் இருந்து வக்கீல் பாஸ்கரனை விடுவிக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...