×

விவசாயிகள் வேதனை கீழ்வேளூர் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

கீழ்வேளூர், ஜூலை 19:கீழ்வேளூர் அருகே விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி நேற்று நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வலிவலம் கனரா வங்கி மற்றும் ஆதமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வடக்குபனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் நேரடியாகவும், கடன் பெற்ற விவசாயிகளில் விடுப்பட்டுள்ளவர்களுக்கு உடனே வழங்க கோரியும், 119 அணக்குடி ஊராட்சிக்கு உட்பட கிராமங்களுக்கு தகுதி பட்டியல் இருந்தும் பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும் உடன் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாட்டியக்குடி கடைத் தெருவில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கோபாலன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகைமாலி, விவசாய சங்க மாவட்ட தலைவர் அப்பிகாபதி உள்ளிட்ட 200க்கும்மேற்பட்டவர்கள் சாட்டியக்குடி கடைத் தெருவில் கூடினர்.
அப்போது காவல் துறை சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது திருக்குவளை தாசில்தார் இளங்கோவன், நீயூ இந்திய இன்சூரன்ஸ் கம்பெம்பெனியின் துணை மேலாளர் கணபதிசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வடக்குபனையூர் கூட்டுறவு வங்கியில் விடுப்பட்ட விவசாயிகளுக்கும் உடன் வழங்குவதாவும், 119 அணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை குறித்த நிலை குறித்தும் எதனால் காப்பீட்டு தொகை இல்லை என்ற காரணம் குறித்தும் விவரங்களை 10 நாற்களில் தெரிவிப்பதாகவும், ஆதமங்கலம் கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்து விடுப்பட்ட 242 பேருக்கும் தற்போது வங்கிக்கு காப்பீடு நிறுவனத்தில் இருந்து வந்த தொகையில் கையிருப்பில் உள்ள எஞ்சியுள்ள தொகையை பிரித்து கொடுப்பது என்றும், மீதமுள்ள தொகையை 45 நாட்களில் காப்பீடு நிறுவனத்தில் இருந்து வரப்பெற்ற உடன் பிரித்து வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்