×

நோயாளிகள் தவிப்பு கொள்ளிடம்- சீர்காழி நெடுஞ்சாலையில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிப்பு

கொள்ளிடம், ஜூலை 19: கொள்ளிடம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் .நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிரதான தெற்குராஜன் வாய்க்காலின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான பாலம் இருந்தது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மார்க்கமாக கன்னியாகுமரை வரை செல்லும் அனைத்து வகையான வாகனங்களும் இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.இந்நிலையில் 100 ஆண்டுகளைக் கடந்தும் இந்த பாலம் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. புதிய பாலம் கட்டுவதற்காக இந்தப்பாலம் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டுள்ளது.

கடமடைப் பகுதியாக விளங்கும் மேற்கு எல்லையான கொள்ளிடம் பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் எக்டேர் விளை நிலங்களுக்கு தெற்குராஜன் வாய்க்கால்தான் பாசன வசதி தருகிறது. இந்த நேரத்தில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வாய்க்காலில் வந்தால்,மேற்கொண்டு தண்ணீர் செல்ல முடியாதபடி, வாய்க்கால் குறுக்கே மண்ணால் அடைக்கப்பட்டு மாற்று வழி செய்யப்பட்டுள்ளது. வாய்க்கால் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வந்தாலும் மழை நீர் வந்லும் தற்பொழுது அடைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து மேற்கொண்டு தண்ணீர் செல்ல முடியாதபடி நிலை ஏற்பட்டுள்ளது.மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இந்தப் புதிய பாலம் கட்டும் பணி நிறைவு பெற குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது வேண்டும். வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.எனவே பாலம் கட்டும் பணி முடியும் வரை தற்காலிகமாக பக்கவாட்டில் குழாய் அமைத்து தண்ணீரை தொடர்ந்து வாய்க்கால் வழியே பாசனத்திற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை தெரிவித்தார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்