×

மின்சாரம் தடையால் மக்கள் அவதி மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கிய நாகை அரசு மருத்துவமனை

நாகை, ஜூலை 19: நாகை அரசு ஆஸ்பத்திரியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தால் இருளில் மூழ்கியுள்ளதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு நாகை, சிக்கல், நாகூர், வேதாரண்யம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக இருப்பவர்களின் உறவினர்கள் சிகிச்சைபெற்று நோயாளிகள் வெளியேறும் வரை ஆஸ்பத்திரியில் தங்கி கொள்கின்றனர். இவ்வாறு தினந்தோறும் நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் வந்து செல்லும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வார்டுகள் தவிர பெரும்பாலான இடங்கள் இருளிலேயே மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே சென்று விட்டு உள்ளே வரும் போது மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
சில நேரங்களில் சமூகவிரோத கும்பல்கள் நோயாளிகளின் உறவினர்களிடம் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து தப்பிசென்றுவிடுகின்றனர். எனவே நாகை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான அளவிற்கு மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...