×

கீழ்வேளூர் அருகே பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரி முற்றுகை போராட்டம்

கீழ்வேளூர், ஜூலை 19: நாகை மாவட்டம் கீழ்வேளூர், ராதாமங்கலம், ஆந்தக்குடி, வெண்மணி, மோகனூர், கூத்தூர், வெங்கிடங்கால் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் முற்றுகை போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.விவசாய சங்க கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் பொறுப்பு செயலாளர் அபுபக்கர், விவசாய தொழலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து டி.எஸ்.பி. அர்சனா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார். பேச்சுவார்த்தையும் தற்போது காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு உடன் வழங்குவதாகவும், மீதமுள்ள விவசாயிகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வழங்குவதாக உறுதி அளித்தன் பேரில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்